விஷால்

ஒரு வருஷம் விஷால் பட்ட பாடு… கழுத்துல அடி அய்யய்யோ என்ன ஆச்சோ…. மதகஜராஜா செய்தியாளர் சந்திப்பில் சுந்தர் சி….!!

By indhuramesh on ஜனவரி 6, 2025

Spread the love

விஷால் : 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணியில் இருந்து 2024 ஆம் ஆண்டு வெளியான ரத்தினம் வரை பல படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு 2006 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2004ல் தொடங்கி 2024 வரை சுமார் 20 வருடங்களாக சிறந்த நடிகராக வலம் வரும் விஷாலின் நடிப்பில் அடுத்த படம் வெளியாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் தான் மதகஜராஜா.

   

2012 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. ஆனாலும் நிதி நெருக்கடியால் படம் சுமார் பத்து வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்துள்ளது. தற்போது இந்த படம் வருகின்ற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

   

 

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. அதில் சுந்தர் சி பேசியபோது படப்பிடிப்பின் போது நடந்த விஷால் தொடர்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “படத்தில் என்னை விட அதிகமாக கஷ்டப்பட்ட ஆத்மா என்றால் அது விஷால் தான். தெரியாமல் அவரிடம் படத்தின் கிளைமாக்ஸில் 8 பேக்ஸ் வர வேண்டும் என்று கூறிவிட்டேன். அவரும் சரி என்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் சில சூழ்நிலைகளால் கிளைமாக்ஸ் சீன் எடுப்பது தள்ளிப் போய்விட்டது.

விஷால் 8 பேக்ஸை அப்படியே கவனித்துக் கொள்ள தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு நாங்கள் சாப்பிடும் போது அந்த உணவின் வாசனையை முகர்ந்து கொண்டு அவ்வளவு கஷ்டப்பட்டார். அதேபோன்று சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்திருப்பார்.

விஷால்

#விஷால்

ஒரு சண்டைக்காட்சியின் போது அவர் சம்மர் சால்ட் அடிக்க வேண்டும் அப்படி அடித்தபோது அவரது கழுத்து தரையில் பட்டு ஒரு சத்தம் கேட்டது. அந்த சமயம் எனக்கு உயிரே போயிருச்சு… அய்யய்யோ என்ன ஆகப் போகிறதோ என்று மனதில் எத்தனையோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அப்பல்லோ மருத்துவமனை அருகிலேயே படப்பிடிப்பு நடந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். நல்ல வேலையாக விஷால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் கூறினார். ஆனால் விஷாலோ சிகிச்சை முடிந்ததும் அடுத்த காட்சிக்கு தயாராகி விட்டார்.

மதகஜராஜா திரைப்படம் வெளிவர வேண்டும் என்று நான் இவ்வளவு போராடியது ஆசைப்பட்டதற்கெல்லாம் ஒரே காரணம், விஷாலின் உழைப்பை மக்கள் பார்க்க வேண்டும். படம் பிடிக்க வேண்டும் என்பது மக்கள் கையிலும் பத்திரிக்கையாளர்கள் கையிலும் உள்ளது. ஆனால் அந்த உழைப்பு மக்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும்” என்று பேசி உள்ளார்.