பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை பலரையும் வெகுவாக ஈர்த்தது. இன்று வரை ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், காளை, தலைவா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோரின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. சூரரை போற்று திரைப்படத்தின் இசைக்காக ஜி.வி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாகவும் ஜிவி பிரகாஷ் என்ட்ரி கொடுத்தார். இசை கைகொடுத்த அளவிற்கு கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ஜிவி பிரகாஷுக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை ஜி.வி பிரகாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை இருக்கிறது.
கணவன் மனைவி இருவரும் இணைந்து ரொமான்டிக்காக பல பாடல்களை பாடியுள்ளனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவையும் விவாகரத்து செய்து பிரியுள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.