“டேய் தகப்பா, மொத்த சொத்தும் எனக்கு தான்”… சொத்துக்காக பெற்ற தந்தையையே கொடூரமாக கொன்ற மகன்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கட்டாச்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒடுவன் குப்பம் கிராமம் பகுதியை சேர்ந்த பழனி (70) என்ற விவசாயி அவருடைய ஊரின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆகவும் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே பழனி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே பழனிக்கும் அவருடைய இரண்டாவது மனைவியின் மகனான 40 வயதுடைய சந்திரசேகருக்கும் அடிக்கடி சொத்து தகராறு வந்துள்ளது. எப்போதும் முதல் தரத்தின் பிள்ளைகளுக்கு அனைத்தையும் கொடுப்பதாக தகராறு செய்துள்ளார்.

பழனியின் பூர்வீக சொத்தை அதே ஊரில் உள்ள விவசாய நிலத்தை மொத்தமாக தன்னுடைய பெயருக்கு சந்திரசேகர் கேட்டுள்ளார். ஆனால் பழனி அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்து தருவேன், உனக்கு மட்டும் எப்படி நிலத்தை மொத்தமாக தர முடியும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவருடைய தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள நிலத்திற்கு இயற்கை உபாதை கழிக்க வந்த தந்தையை சந்திரசேகர் டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார்.

   

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தலைமறைவாக உள்ள சந்திரசேகரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.