கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டு மங்கலம் பகுதியை சேர்ந்த பிளம்பர் ஆன வினோ என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் வினோ பிளம்பிங் வேலைக்கு சென்றபோது பிரபா என்றவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருடைய கணவரான கண்ணன் என்பவர் வெளிநாட்டில் தங்கிய வேலை பார்த்து வருகிறார். இதனிடையே வினோ மற்றும் பிரபா இருவரும் மாறி மாறி செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதோடு விடிய விடிய வீடியோ கால் பேசியுள்ளனர்.
இரவு முழுவதும் கணவர் தூங்காமல் வேறு ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவதை கண்டுபிடித்த பிளம்பர் வினோவின் மனைவி ரம்யா, கண்ணனின் மனைவி பிரபாவை தொடர்பு கொண்டு தன் கணவருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் வீடியோ கால் பேசுவதை உன் கணவரிடம் சொல்லிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆத்திரம் அடைந்த ரம்யா தன் கணவரை கையோடு பிரபா வீட்டுக்கு அழைத்துச் சென்றதோடு அங்கிருந்த பிரபாவின் கணவர் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூறி அவருடைய மனைவியை பிரபாவை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டிலிருந்த அறிவாலை எடுத்து வந்து பிளம்பர் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த வினோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரம்யா அளித்த புகாரியின் அடிப்படையில் கண்ணன் மற்றும் அவருடைய மனைவி பிரபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். இளம் பெண்ணுடன் விடிய விடிய வீடியோ கால் பேசிய பிளம்பருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…