“செத்து தொலையேன் என வம்புக்கு இழுத்த மூதாட்டி”?… இரும்பு பைபால் ஒரே போடாய் போட்ட நபர்… புத்தாண்டு நாளில் பறிபோன உயிர்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மரவநந்தம் கிராமத்தில் ராஜேந்திரன் (60) என்பவர் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் இவருக்கு வள்ளியம்மாள் (55) என்ற மனைவி உள்ளார். வள்ளியம்மாள் வீட்டுக்கு அருகில் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். வள்ளி மற்றும் கன்னியம்மாள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கன்னியம்மாள் தினமும் மாலை வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு பள்ளி வீட்டுக்கு சென்று அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது பள்ளியின் கணவர் ராஜேந்திரனுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வியாதி இருப்பதால் அவர் தொடர்ந்து மாத்திரை உட்கொள்வது வழக்கம்.

அதனைக் கண்டு எப்போதும் கன்னியம்மாள், உன்னால தான் வள்ளி எப்போதும் கஷ்டப்படுகிறாள் என வசை பாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல கன்னியம்மாள் ராஜேந்திரன் வீட்டுக்கு வள்ளியிடம் பேச வந்தபோது ராஜேந்திரன் மாத்திரை உட்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட கன்னியம்மாள் வழக்கம் போலவே, எப்போ பார்த்தாலும் எதுக்கு இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறாய், இதையெல்லாம் விட்டுவிட்டு செத்து தொலையேன் என்று கூறினார்.

   

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் எங்க வீட்டுக்கு வந்து என்னையே சாக சொல்ற என தனக்கு அருகில் இருந்த விறகு அடுப்பு ஊத பயன்படுத்தும் இரும்பு பைப்பை கொண்டு கன்னியம்மாள் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த கன்னி அம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்துள்ளனர். புத்தாண்டு நாளில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.