முந்தானை முடிச்சு படத்துல அ ஆ சொல்லித்தந்த டீச்சரா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..!

By Mahalakshmi on ஜூன் 4, 2024

Spread the love

பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உன்னி மேரியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்த பிரபலமான நடிகர் நடிகைகள் பின் நாட்களில் என்ன ஆனார்கள் என்பதை தெரியாமல் போய்விடுகின்றது. சில நடிகைகள் சீரியல் என்று செட்டில் ஆகிவிடுகிறார்கள். அவர்களின் முகங்களாவது அவபோது தெரிய வருகின்றது.

   

ஆனால் ஒரு சில நடிகைகள், குடும்பம், குழந்தை, கணவர் என சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் பழைய படங்களை பார்க்கும் போது இந்த நடிகை இப்போது எப்படி இருப்பார் என்ற எண்ணம் வரும். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் உன்னி மேரி. தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அந்தரங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை உன்னி மேரி .

   

 

அதற்கு முன்னதாக மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கின்றார். 1962 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிறந்த இவர் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் ரஜினி கமல் பாக்கியராஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இவர் ஜானி, ரோஜா பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்யராஜ் படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிகை ஊர்வசி அவரை கிண்டல் செய்வது, மேலும் ஊரில் இருக்கும் பெரியவர்களுக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதை பார்த்து அனைவரும் ஜொள்ளு விடுவது போன்றவை ரசிக்கும் படியாக இருக்கும்.

மூன்று வயது முதலே பரதநாட்டிய கலையை கற்று வந்த இவர் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார், தனது அம்மாவை போலவே தற்போது டான்ஸ் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார், 1982 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ரிஜோஸ்  என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு நிர்மல் என்ற மகனும் உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கும் இவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். மேலும் தனது டான்ஸ் பள்ளியையும் சிறப்பாக நடத்தி வருகிறார். இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.