நீண்ட வருடம் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை நஸ்ரியா.. அதுபோன்ற கதைகளில் நடிக்க விருப்பமாம்..!

By Mahalakshmi on ஆனி 4, 2024

Spread the love

பிரபல நடிகையான நஸ்ரியா மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியா, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் டாப் நடிகையாக வலம் வந்தார்.

   

 

   

பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட நஸ்ரியா பின்னர் சில ஆண்டுகள் கழித்து நானி உடன் அடடே சுந்தரா என்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

 

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இனி தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது பிரபல இயக்குநரும், நடிகையுமான பேசில் ஜோஷப்பிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

சூக்‌ஷமா தர்ஷினி என பெயரிட பட்டிருக்கும் இந்த படத்தை எம்சிஜித்தின் இயக்குகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழில் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக நஸ்ரியா தெரிவித்திருந்தார். படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், தமிழில் பீல் குட் காதல் கதையில் நடிக்க விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.