CINEMA
தயவுசெய்து இதைப் பண்ணாதீங்க… தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மும்தாஜ்…
மும்தாஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றிய முன்னணி நடிகை மற்றும் கவர்ச்சி நடிகை ஆவார். மும்தாஜ் மும்பை பாந்த்ராவில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையாக இருந்தவர் மும்தாஜ். அதன் காரணமாக சினிமாவில் நுழையும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. முதலில் இந்தி திரை உலகில் நடித்ததன் மூலமாகவே சினிமாவில் உள்ளே வந்தார் மும்தாஜ்.
1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2000ஆம் ஆண்டில் எஸ் ஜே சூர்யாவின் குஷி திரைப்படத்தில் விஜய் ஜோதிகா உடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தார் மும்தாஜ்.
குஷி திரைப்படத்தில் வரும் கட்டிபுடி கட்டிப்புடிடா என்ற பாடல் இன்றளவும் பிரபலமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த பாடலினால் பட்டி தொட்டி எங்கும் பரவிய மும்தாஜ் அவர்களுக்கு பல சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அடுத்ததாக அதே ஆண்டு ஸ்டார் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் மச்சா மச்சினியே என்ற பாடல் ஹிட்டானது. தொடர்ந்து மறுபடியும் பிரசாந்துடன் இணைந்து 2001 ஆம் ஆண்டு சாக்லேட் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் மலை மலை என்ற பாடலில் ஆடி இருப்பார் மும்தாஜ். இந்த பாடலும் இளைஞர்களிடையே மிக பிரபலமாக அந்த நேரத்தில் இருந்தது.
தொடர்ந்து லூட்டி, ஏழுமலை, ஜெமினி, செல்லமே, லண்டன், வீராச்சாமி, ராஜாதி ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார் மும்தாஜ். பின்னர் இடைவேளை எடுத்துக் கொண்ட மும்தாஜ் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் இரண்டில் தோன்றினார். அதுவே அவர் கடைசியாக ஊடகத்தில் தோன்றிய நிகழ்ச்சி ஆகும்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரான மும்தாஜ் அதற்குப் பிறகு தீவிரமாக இஸ்லாம் மத மார்க்கத்திற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தன்னை முழுவதுமாக புர்காவினால் மூடிக்கொண்டே எல்லா நிகழ்ச்சிகளும் பங்கேற்றார். சமீபத்தில் கூட அவர் மெக்கா மெதினாவுக்கு சென்று கூட ஒரு வீடியோ வெளியிட்டு இருப்பார். அவர் ஒரு நேர்காணையில் நான் முன்னாடி தெரியாம கவர்ச்சியாக நடித்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார். அது சம்பந்தமாக தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் மும்தாஜ். அது என்னவென்றால் என்னுடைய ரசிகர்கள் தயவு செய்து முன்னாடி நான் நடித்த படங்களையோ அந்த புகைப்படங்களையோ பார்க்காதீர்கள் என்று கூறியிருக்கிறார் மும்தாஜ்.