CINEMA
கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் மயக்கும் ரச்சிதா.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட் கிளிக்ஸ்..!
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார்.
சின்னத்திரை சீரியல் மூலமாக பிரபலமான இவருக்கு வெள்ளி திரையிலும் நடிக்க மிகவும் ஆசை. பட வாய்ப்புகளை பெற விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் தேடி வந்தன. மெய் நிகரே என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ள இவர் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அதன்படி தற்போது அவர் கருப்பு நிற சேலையில் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.