CINEMA
சீரியலில் தான் ஹோம்லி.. நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்.. ஜோவிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!
பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் கடந்த 1988 ஆம் ஆண்டு ரிலீசான பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சுந்தர புருஷன் திரைப்படம் மூலம் லிவிங்ஸ்டன் பிரபலமானார். லிவிங்ஸ்டனுக்கு ஜன்சிதா என்ற மனைவி உள்ளார்.
இவர்களுக்கு ஜோவிதா, ஜமீனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் ஜோவிதா சினிமா துறையில் மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் ஜோவிதாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒரு சில காரணங்களால் பூவே உனக்காக சீரியல் இருந்து ஜோவிதா விலகிவிட்டார். அதன் பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அருவி சீரியலில் ஹீரோயினாக ஜோவிதா நடித்தார்.
அந்த சீரியலில் நடிகை அம்பிகா, ஈஸ்வர் ரகுநாதன், லாவண்யா, கிருத்திகா, கார்த்திக் வாசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பகை, குடும்ப செண்டிமெண்ட், பாசப்பிணைப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து விட்டது. இப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மார்டன் உடைய ஜோவிகா பகிர்ந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.