Connect with us

ஒரு படம் பண்ணும் போது இந்த விஷயத்துல தலையிடவே மாட்டேன்… ஓபனாக பேசிய அருள்நிதி…

CINEMA

ஒரு படம் பண்ணும் போது இந்த விஷயத்துல தலையிடவே மாட்டேன்… ஓபனாக பேசிய அருள்நிதி…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மு கருணாநிதி அவர்களின் பேரன் தான் அருள்நிதி ஆவார். இவரது தந்தை மு க தமிழரசு இன்றைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி ஆகியோர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பணியாற்றுபவர்கள் ஆவர்.

   

2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருள்நிதி. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அருள்நிதி. அடுத்ததாக உதயம் படத்தில் நடித்தார் அருள்நிதி. அதற்கு அடுத்ததாக மௌன குரு திரைப்படம் நினைத்த அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை.

   

2013 ஆம் ஆண்டு தகராறு, 2014 ஆம் ஆண்டு ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதோடு அருள்நிதியின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பின்னர் 4 போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், டி பிளாக், தேஜாவு, டைரி போன்ற திரில்லர் படங்களில் நடித்தார் அருள்நிதி.

 

சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அருள்நிதி படங்கள் தேர்ந்தெடுப்பதை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், படத்துக்கு கதை ரொம்ப முக்கியம். நல்ல கதை அம்சம் இருக்கிறதா என்பதை தான் நான் படத்துல பாப்பேன். அது தவிர தயாரிப்பாளர்கள்ட்ட என்னோட படம் பெரிய பட்ஜெட்டில் வரணும் அப்படி எல்லாம் நான் எதுவுமே சொல்ல மாட்டேன். ஒரு படம் தயாரிப்பாளர் எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்கனா அது அவரோட விருப்பம். அவர் படத்துக்கு எவ்வளவு செலவு பண்ணனும்ங்குறது அவர்தான் முடிவு பண்ணனும். அந்த விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன் என்று ஓபனாக கூறியுள்ளார் அருள்நிதி.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top