CINEMA
MGRக்கு இனி பேசவே வராதுன்னு சொன்ன எதிரிகள்… வாய்ப்பில்லை ராஜா என சம்பவம் செய்த புரட்சி தலைவர்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர் MGR. தமிழ் நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எம்ஜிஆர். அவரது ஆட்சி காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவருக்கு பிறந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல எம்ஜிஆர் பக்தர்கள் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு பெயருடனும் புகழுடனும் இருந்தவர் எம்ஜிஆர்.
மக்கள் மனதில் அந்த அளவுக்கு இடம் பிடித்த எம் ஜி ஆர் ஐ எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டார். அதுக்கு காரணம் என்னவென்றால், தொழிலாளி படத்தின் சூட்டிங் இல் எம்.ஜி.ஆருக்கும் எம் ஆர் ராதாவுக்கும் ஒரு வசனத்தினால் மனக்கசப்பு ஏற்பட்டது. உதயசூரியன் என்ற வார்த்தை கொண்ட வசனத்தை எம்ஜிஆர் பேச முற்பட்டபோதுதான் அந்த சண்டை எழுந்தது. இந்த மனக்கசப்பு பெருகிக்கொண்டே எம் ஆர் ராதாவை வளர விடாமல் எம்ஜிஆர் தான் தடுத்தார் என நினைத்துக் கொண்ட எம் ஆர் ராதா எம்ஜிஆர் வீட்டுக்கு நேராக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமில்லாமல் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் எம் ஆர் ராதா. ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவத்தால் எம்ஜிஆர்க்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவரால் வாழ்நாள் முழுவதும் பேசவே முடியாது என்று மருத்துவர்கள் கூறினர். துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் எம்ஜிஆர்.
அப்போது தேர்தலிலும் வெற்றி அடைந்தார் எம்ஜிஆர். அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பின்பு எதிரிகள் அனைவரும் எம்.ஜி.ஆர். இனி பேசவே மாட்டார் என்று நினைத்துக் கொண்டு இருந்தனர். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டிய நாளிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது எதிரிகள் எம்ஜிஆரால் இனி பேசவே முடியாது ஒரு சைகையால் பேசக்கூடிய ஒரு மனிதர் முதலமைச்சராக ஆகவே முடியாது என்று நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று கூறினார்.
அந்த நேரத்தில் ஆளுநராக இருந்த குரானா மரியாதை நிமித்தமாகவும் வரவேற்பதற்காகவும் எம் ஜி ஆர் ஐ சந்திக்க சென்றார். அப்போது அவரை சந்தித்து வந்த குரானா எம்ஜிஆர் உடல் அளவிலும் மனதளவிலும் பிட்டாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையுமே இல்லை என்று நல்ல செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.
வாழ்நாளில் இனி எம்ஜிஆரால் பேசவே முடியாது என்று மருத்துவர் கூறிய பின்னரும் எம்ஜிஆர் அந்த சோதனையிலிருந்து மீண்டு எழுந்து வந்தார். தன்னை வீழ்த்த நினைத்த எதிரிகள் முன்பு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர்.