NEWS
அடடே சூப்பர்.. இனி நீங்களும் புது கார் வாங்கலாம்.. 3.5% தள்ளுபடி.. அசத்தலான அறிவிப்பு..!
இந்தியாவில் மக்கள் மத்தியில் வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் பேருந்து மற்றும் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் வாகனம் மூலமாகவே மக்கள் பயணிக்கிறார்கள். இப்படி வாகன பயன்பாடு என்பது அதிகரித்துள்ள நிலையில் பழைய காரை ஸ்கிராப் செய்து புதிய கார் வாங்கினால் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடமிருந்து தள்ளுபடி கிடைக்கிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 1.5% முதல் 3.5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
அதேசமயம் சில முன்னணி சொகுசு கார் உற்பத்தியாளர்கள் சுமார் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தகவலை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய அதிகாரப்பூர்வை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய மண்டபத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். ஆனால் எந்த நிறுவனங்கள் இத்தகைய தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டன என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு முதல் புதிய வாகன ஸ்கிராப் கொள்கையின் மூலமாக வாகன ஸ்கிராப்பை குறைப்பதில் அரசு முன்னிலை வகிக்கிறது. இதனால் பழைய வாகனங்களை அகற்றுவதன் மூலமாக மாசுபாட்டை கட்டுப்படுத்தலாம். ஸ்கிராப்பிங்கின் போதும் கூட வாகன உரிமையாளர் வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் ஐந்து முதல் ஆறு சதவீதம் பெறுகின்றார். இதனைத் தவிர பாலிசியில் விலக்கு உள்ளது. தற்போது உற்பத்தியாளர்களால் தள்ளுபடிகளும் வழங்கப்படுவதால் புதிய காரை பெற மக்களை இது ஊக்குவிக்கும்.