TRENDING
மகேந்திர சிங் தோனி இடத்துல கெத்து இருந்திருப்பார்.. வெளியான லப்பர் பந்து படத்தின் டிரெய்லர்..!!
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து லப்பர் பந்து என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலசரவணன், காளி வெங்கட், சுவாசிகா விஜய் உள்ளிட்ட பலர் லப்பர் பந்து படத்தில் நடிக்கின்றனர். ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார்.
சோனி ஆடியோ உரிமை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகியுள்ளது. நேற்று பட குழுவினர் இன்று படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.
சற்றுமுன் லப்பர் பந்து படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. ட்ரெய்லர் ஆரம்பிக்கும் போதே ஜார்கண்ட் போகாமல் கடலூருக்கு வந்திருந்தால் மகேந்திர சிங் தோனி இருக்கும் இடத்தில் நம்ம கெத்து இருந்திருப்பார் என ஒலிபெருக்கியில் ஒருவர் பேசுகிறார். ட்ரைலரை வைத்து பார்க்கும் போது ஆக்ஷன் செண்டிமெண்ட் காதல் கலந்த படமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதோ அந்த டிரெய்லர்..