நடிகை ரேகா நாரின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் அன்னை சத்யா நகரில் 55 வயதுடைய மஞ்சன் என்பவர் நேற்று மாலை சாலையில் படுத்து கிடந்தார். அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த கார் சாலையில் படுத்துக் பிறந்த மஞ்சன் மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த மஞ்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மஞ்சன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கார் அடையாறில் வசித்து வரும் சீரியல் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் விபத்து நடந்த போது ரேகா நாயர் காரில் இருந்தாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடிகை ரேகா நாயர் வம்சம், ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். ரேகா நாயர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரு முறை பயில்வான் ரங்கநாதன் ரேகாவை பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் நடுரோட்டில் ரேகா நாயர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் உலா வருகிறது.