பீ சுசீலா தன்னால் பாடவே முடியாது என்று சொன்ன பாடல்… டார்ச்சர் செய்து பாடவைத்த எம் எஸ் வி!

By vinoth

Published on:

msv and suseela

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

எம் ஜி ஆர் படங்களுக்கு மக்களைக் கவரும் வெகுஜன பாடல்களை இசையமைக்கும் எம் எஸ் வி சிவாஜி படங்கள் என்றால் தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் என்று குஷியாகிவிடுவார். அதனால் அவர் சிவாஜிக்கு இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

   

அப்படி 1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.  இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக  ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ‘ என்ற பாடல் இன்றளவும் கேட்கப்படும் பாடலாக உள்ளது.

இந்த படத்தில் வரும் மற்றொரு ஹிட் பாடல்தான் பீ சுசீலா பாடிய ‘’நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’’ என்ற பாடல் து. வாலி எழுதிய இந்த பாடலுக்கு தனது குரலின் மூலம் உயிர்கொடுத்தவர் தான் பி.சுசிலா. ஆனால் இந்த பாடலை அவர் மிக எளிதாக பாடிவிட வில்லையாம். இந்த பாடல் பதிவின்போது, என்னால் இந்த பாடலை பாட முடியாது என்று சுசிலா அழுதுகொண்டே கூறியுள்ளார்.

ஆனால் இசையமைப்பாளர் எம் எஸ் வி அவரை அப்படி விட்டுவிடவில்லை. நீதான் இந்த பாடலை பாடவேண்டுமென சொல்லி பிடிவாதமாக இருந்துள்ளார். அதனால் பல ரீ டேக்குகள் வாங்கிதான் இந்த பாடலை சுசீலா பாடி முடித்துள்ளார். அப்படி உருவான பாடல்தான் இன்றுவரை எவர்க்ரீன் ஹிட்டாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.