BREAKING: 100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

Spread the love

ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர முன்னாள் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகியோர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாகக் கடந்த 2024-ஆம் ஆண்டு கரூர் சார் பதிவாளர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் இவ்வழக்கு திங்கள்கிழமை காலை 11 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார், இதன் அடுத்தகட்ட விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மற்றொரு முக்கிய திருப்பமும் நிகழ்ந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதியழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த தேர்தல் வழக்கை திரும்பப் பெற விரும்புவதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“மாணவர்களுக்காக உயிராகுடுப்பேன்…” நீதி கிடைக்கிற வரைக்கும் விடமாட்டான்… தொடரும் உண்ணாவிரதம்… மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக…

2 minutes ago

ஐயோ… தினமும் அளவுக்கு அதிகமா பால் குடிக்கிறீங்களா…? எச்சரிக்கை… உங்கள் உடலுக்குள் நடக்கும்…. இந்த அதிர்ச்சி உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க…!!

பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப…

13 minutes ago

வெடித்த சர்ச்சை…! அடுத்தடுத்து சிக்கும் தவெக அமைச்சர்கள்… ஜனநாயகன் படத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்த அமைச்சர் ராஜீவ்… குவியும் கண்டனம்…!!

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' (18 வயதுக்கு…

16 minutes ago

“கோஷம் இல்லை… கூச்சல் இல்லை…” ஆனால் இது போராட்டம் தான்… சுட்டெரிக்கும் வெயிலில்… பாடல் பாடி… வன்முறை இல்லாமல் மனதை வென்ற மிசோராம் போராட்டம்… நெகிழவைக்கும் வீடியோ…!

மிசோராமில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான சிஜேபி அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் புகழ்பெற்ற "கிவ்…

17 minutes ago

“அய்யய்யோ… வீதியில் நின்று பேசிய குழந்தைகள் மீது… தீடீரென பாய்ந்த தெருக்காளைகள்…! நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி…!!”

சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…

30 minutes ago