“கலையை மண்டியிடச் செய்யாதீர்கள்” – தணிக்கைக் குழுவின் தாமதத்தால் எக்ஸ் தளத்தில் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தாமதமாவதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், “சினிமாத் துறைக்கு அரசியல் அனுமதி என்பது தேவையற்ற ஒன்று.
அதிகாரத்தின் பலத்தைக் கொண்டு கலையை மண்டியிடச் செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் தற்போது மிரட்டல் விடுக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.