முதலமைச்சர் விஜய் குறித்துத் தூத்துக்குடி கூட்டத்தில் அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல் உட்பட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை வீட்டிலேயே வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதன்பின்னர் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கண்டேயனைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, திமுகவிற்குச் சிறைச்சாலை ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்றும், பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்குத் தங்கள் கட்சி எப்போதும் அஞ்சாது என்றும் தெரிவித்தார். தவெக அரசு ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்குக் காவல்துறையை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார். அத்துடன் தமிழ்நாட்டின் முக்கிய உரிமைகளுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் இணைந்து நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
