“இப்போவே விஜய் படம் பார்க்கணும்…” ஜனநாயகன் படத்திற்கு அடம்பிடித்துக் கதறும் 3 வயது சிறுவன்…  ரசிகர்களின் அன்பை கண்டு இயக்குநர் எச்.வினோத் நெகிழ்ச்சி….!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

விஜய்யின் இறுதிப் படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஜூலை 23 அன்று வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை வாரியம் அப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் திரையரங்கிற்குள் சென்று படம் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, 3 வயது சிறுவன் ஒருவன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இப்போதே பார்க்க வேண்டும் எனத் தன் தாயிடம் அடம்பிடித்துக் கதறி அழுழும் காணொளி ஒன்று இணையதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் எச்.வினோத், படம் லீக்கானது மற்றும் சான்றிதழ் தாமதமானது எனப் பல சிக்கல்கள் வந்தபோதும் விஜய் மற்றும் தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவித்தார். ‘ஏ’ சான்றிதழ் காரணத்தால் குழந்தைகளால் தியேட்டருக்கு வர முடியாமல் போனது வருத்தமளித்தாலும், தடைகளைத் தாண்டி திரையரங்கம் நோக்கி வரும் ரசிகர்களின் அன்பிற்குத் தலைவணங்குவதாக அவர் கூறினார். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.