அடச்சீ… கல்யாணம் ஆனதை மறைச்சு அக்கிரமம்… பணி நேரத்தில் உல்லாசத்துக்கு வற்புறுத்தல்…! பெண் அதிகாரியின் சைக்கோத்தனத்தால்… தற்கொலைக்கு முயன்ற IPS அதிகாரி…! ஐதராபாத்தில் பரபரப்பு…!!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது தனியார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தீவிரமாகப் படிக்கத் தொடங்கிய ஆந்திராவைச் சேர்ந்த உதய்கிருஷ்ணா, அதில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். அதன்பின்னர், அவருக்குத் தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி ஒதுக்கப்பட்டு, ஐதராபாத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

பயிற்சியின் போது, அவருடன் உடன் பணியாற்றிய ஒரு பயிற்சிப் பெண் அதிகாரி, பணி நேரத்தில் தன்னிடம் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு உதய்கிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண் அதிகாரி உதய்கிருஷ்ணா மீது ஐதராபாத் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

   

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உதய்கிருஷ்ணா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர், அந்தப் பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை மற்றும் அச்சுறுத்தலே தனது இந்த முடிவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.