திமுகவை கைகழுவிய காங்கிரஸ்… 2 மைச்சர் பதவிக்காக… இந்தியா கூட்டணியில் வெடித்த ஜான் பிரிட்டாஸின் பகிரங்க ஆக்ரோஷம்…!!

Spread the love

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய அரசியல் அணுகுமுறைகள் குறித்து சிபிஎம் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற கேரளா மற்றும் தமிழ்நாடு தேர்தல் சூழல்களின் பின்னணியில் பேசிய அவர், தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு மாநில அளவில் கூட்டணி ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, கேரள தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் சிபிஎம் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் மீது முன்வைத்த கடுமையான தனிப்பட்ட விமர்சனங்களுக்கும், அவர்கள் பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் தனது கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்தார்.

மேலும், தமிழ்நாட்டில் திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் எடுத்துள்ள புதிய அரசியல் நிலைப்பாட்டையும் அவர் அக்கூட்டத்தில் கடுமையாகச் சாடினார். வெறும் சில நாடாளுமன்ற அல்லது அமைச்சர் பதவிகளுக்காக, நீண்ட கால கூட்டாளியான திமுகவை காங்கிரஸ் கைகழுவி இருப்பது இந்தியா கூட்டணியின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி அல்ல என்று அவர் எச்சரித்தார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் போக்குகள் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பலவீனத்தையேக் காட்டும் எனக் குறிப்பிட்ட ஜான் பிரிட்டாஸ், மதச்சார்பின்மை மற்றும் பாஜகவுக்கு எதிரானப் போராட்டத்தில் சிபிஎம் யாருடைய சான்றிதழையும் எதிர்பார்க்கவில்லை என்பதை நினைவூட்டி, பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரஸ் இன்னும் பொறுப்புணர்வுடன் “பரந்த மனப்பான்மையுடன்” செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago