இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் எதெல்லாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் டோவினோ தாமஸ் நடித்த ARM திரைப்படம்செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. டோமினோவின் நடிப்பு மற்றும் தனித்துவமான அவதாரங்களுக்காக இந்த படம் பாராட்டை பெற்றது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நவம்பர் 8 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், ரஜினி வெளியான திரைப்படம் வேட்டையன் திரைப்படம். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படம் நவம்பர் 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்-ன் முப்பதாவது படமாக வெளியான திரைப்படம் தேவாரா பகுதி-1. கொரட்டல் சிவா இந்த படத்தை இயக்கி உள்ளார் இந்த படமானது நவம்பர் எட்டாம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்தார்கள். இந்த தொடர் இந்தி பதிப்பான சிட்டாடல் ஹனி பனியில் சமந்தா நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு சிட்டாடல் ஹனி பனி என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடிகர் வருன் தவான் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டி.கே இயக்கி உள்ளார்கள். இதுவும் நவம்பர் 8 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
