நடிகர் நெப்போலியன் 16 வயதில் இருந்து அரசியலில் இறங்கி 27 வயதில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிரமான தொண்டராகவும் ரசிகராகவும் அவரை பின்பற்றி வந்த நெப்போலியன் சினிமாவில் அறிமுகமான ஒரு சில ஆண்டுகள் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதன் பிறகு எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். இதனிடையே ஜெயசுதா என்பவரை நெப்போலியன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் அவருடைய மூத்த மகன் தனுசுக்கு நான்கு வயது இருக்கும் போதே தசை சிதைவு நோய் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தன்னுடைய மகனுக்காக குடும்பத்தோடு நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நெப்போலியன் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது மகனுக்கு 25 வயதாகும்போது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தல் நெப்போலியன் அவருக்காக பெண் தேடி வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்தார். இரு வீட்டார் சம்மதத்தோடு வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திருமணம் ஜப்பானில் இன்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக கடந்த மாதமே நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு பயணம் செய்தனர். நெப்போலியன் மகன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் கணவர் தனுஷ் உடன் நெப்போலியன் மருமகள் அக்ஷயா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
