தேனாம்பேட்டை சிக்னல் அருகே 92 சி என்ற மேன்ஷனில் ஒருமுறை பாக்யராஜ் இருந்தாராம். அந்த இடத்திற்கு கவுண்டமணி அடிக்கடி வந்து போவாராம். அங்கே செந்தில், சங்கிலி முருகன் எல்லாரும் இருந்தார்களாம். மேலும் அங்கே சின்ன முருகன் என்பவரும் இருந்துள்ளார். இவர் ஆர் எஸ் மனோகர் நாடகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். இங்குதான் கல்லாப்பெட்டி சிங்காரம் இருந்துள்ளார்.

இவர் நிறைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவருடைய பேச்சு, பாடி லாங்குவேஜ் எல்லாவற்றாலும் ரொம்பவே கவரப்பட்டுள்ளார் அங்கிருந்த பாக்யராஜ். அவருடைய பாடி லேங்குவேஜ் மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி கல்லாப்பட்டி சிங்காரம் கரூர் காரர். ஆதலால் அவர் கொங்கு பாஷையில் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாமாம். அந்த அளவிற்கு அழகாக இருக்குமாம்.

கொஞ்சம் திருட்டு முழி, வெள்ளந்தியான முகம் கொண்டவர் கல்லாப்பெட்டி முருகன். அப்போது பாக்யராஜ் இயக்குனராக இல்லையாம். ஆனால் நாம் இயக்குனரானால் கல்லாப்பெட்டி சிங்காரத்தை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவருடைய நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாராம் பாக்யராஜ்.

அதனால் அவருடைய முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் படத்தில் பாக்யராஜுக்கு அப்பாவாக கல்லாப்பெட்டி சிங்காரத்தை நடிக்க வைத்துள்ளார். தொடர்ந்து கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார் பாக்யராஜ். இப்படி சினிமாவில் கோலோச்சி வந்த கல்லாப்பெட்டி சிங்காரம் 90களின் ஆரம்பத்திலேயே தன்னுடைய கலை பயணத்தை முடித்துக்கொண்டார். ஆம் அவருடைய 52 வயதிலேயே உயிரிழந்துவிட்டார்.
