காதலிக்காக மதம் மாறிய நாகேஷ்.. ஆனா அதுக்கு அப்புறம் இவர் செஞ்சது தான் ஹைலைட்..!

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

1959 ஆம் வருடம் தாமரைக் குளம் என்ற படத்தில் முதன்முதலாக நடித்து திரைப்படத்துறையில் புகுந்தார் நாகேஷ்.  அதன் பிறகு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

இவரோடு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் மனோரமா. கே பாலச்சந்தர் கதை வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.  தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

   

நகைச்சுவை மன்னன் நாகேஷின் குடும்ப புகைப்படங்கள் இதோ

 

இவருடைய முழுபெயர் பீட்டர் நாகேஷ். சினிமாவில் நடிப்பதற்கு முன் கிறிஸ்துவ பெண் ஒருவரை உருகி உருகி காதலித்தாராம். இவருடைய காதல் விவகாரம் அந்த பெண் வீட்டாருக்கு தெரிய வரவே அவர்கள் மதம் மாறினால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் நாகேஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாராம்.

அதன்பிறகு இவர் செய்தது தான் முக்கியமான விஷயம். 1957 ஆம் ஆண்டு பீட்டர் நாகேஷ்-ரெஜினா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்ற மூன்று ஆண் பிள்ளைகள் இவருக்கு இருந்தார்கள். முதல் மகனுக்கு கிறிஸ்துவ பெண்ணையும், இரண்டாவது மகனுக்கு முஸ்லீம் பெண்ணையும், மூன்றாவது மகனுக்கு இந்து பெண்ணையும் கட்டி வைத்து எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்து வந்தாராம்.