2025ஆம் வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது.இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த படம் வணங்காண். இந்த படம் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனமும் சுரேஷ் காமாட்சியும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படமும் பொங்கலுக்கு விருந்தாக திரைக்கு வர உள்ளதாக ஏற்கனவே படம் குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகை ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
வீரதீர சூரன் திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜய் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படமும் 2025 பொங்கலுக்கு களமிறங்க உள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
‘தேஜாவு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். இவர் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.