ஆர் ஜே பாலாஜி காமெடி நடத்தவராக இருந்து திரையை உலக வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது ஹீரோ கதைகளும் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேம் திரைப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோது மோசம் இல்லாமலே வசூல் செய்தது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது சொர்க்கவாசல் படத்தில் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார். இதுவரை காமெடி கலந்த கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்த இவர் மற்றொரு பக்கம் நடிப்பையும் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் காமெடி தாண்டி இது போன்ற படங்களிலும் நடிக்க முடியும் என்று ஆர்.ஜே பாலாஜி நிரூபித்துள்ளார்.
ஜெயில் கான்செப்ட் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் படத்தில் சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடித்துள்ளார். 1999 ஆம் வருடம் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. செய்யாத தவறுக்காக சிறை செல்லும் ஒரு கைதி பற்றிய கதைதான் இந்த படம்.
மேலும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி அல்டிமேட்டாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.