இன்றைய காலகட்டத்தில் பலருக்கு டேப்லெட் ஒரு விருப்பமான பொருளாக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆன்லைனில் பாடம் படிப்பவர்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் மிகவும் உதவிகரமாக இருக்கும். அப்படி நீங்கள் டேப்லெட் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் பட்ஜெட் விலையில் அதுவும் ரூபாய் 15 ஆயிரத்துக்கும் கீழ் சிறந்த டேப்லெட்டுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
1. Samsung Galaxy Tab A9
ரூ15000 கீழ் பட்ஜெட் விலையில் கிடைக்ககூடிய ஒரு சிறந்த டேப்லெட் samsung galaxy tab a9. நீங்கள் டேப்லெட் வாங்க வேண்டும் ஆனால் அதில் ஸ்கிரீன் மிகவும் பெரிதாக இருக்கக் கூடாது ஹாண்டியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். 8.7 இன்ச் ஸ்கிரீனை இது கொண்டிருக்கிறது. 4 gb ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்சை கொண்டிருக்கிறது. மீடியா டெக் ஹீலியோ ஜி99 சிப்சட்டை இது பயன்படுத்துகிறது. 15 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு சப்போர்ட் செய்யும் 5100mAH பேட்டரி பேக்கையும் இது கொண்டு இருக்கிறது. இதன் விலை 12999 ரூபாய் ஆகும்.
2. Honor Pad X8a
பட்ஜெட் விலையில் கிடைக்க கூடிய அடுத்த டேப்லெட் ஹானர் பேட் X8a .இது 500 கிராமுக்கு குறைவான எடை கொண்டது. snapdragon 680 பிராசஸரில் இயங்குகிறது. 90 hz ரெப்பிரேஷ் ரேட் டிஸ்ப்ளேவை இது கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 இல் இயங்குகிறது. 8,300 mah பேட்டரி உடன் 4ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த டேப்லெட்டின் விலை 12999 ஆகும்.
3. Redmi Pad SE
அடுத்ததாக பட்ஜெட் விலையில் சிறந்த டேப்லெட் ரெட்மி பேட் SE. 11 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 90 hz எச்டி பிளஸ் ரெசல்யூசன் சப்போர்ட் செய்கிறது. இந்த டேப்லெட்டில் 8gb ram மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்ட்ராகோன் 680 சிப்செட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்புறத்தில் 8 எம்பி கேமராவும் முன்புறத்தில் 5 எம்பி ஷூட்டரும் உள்ளது. டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் 8000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த ரெட்மி பேட் SE இன் விலையும் ரூ12999 ஆகும்.
4. Lenovo Tab M10 FHD Plus
அடுத்ததாக பார்க்கக்கூடிய டேப்லெட் லெனோவாவின் டேப் எம் M10 fhd பிளஸ் ஆகும். 2கே ரெசல்யூஷன்க்கான சப்போர்ட்டுடன் சிறந்த ஸ்கிரீனை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 680 processor மூலம் இயக்கப்படுகிறது. 7700 mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த டேப்லெட்டின் விலை ரூ 13399 ஆகும்.
5. Oppo Pad Air
அடுத்ததாக பட்ஜெட் விலையில் சிறந்த டேப்லட் ஆக இருப்பது Oppo Pad Air. இது மிகவும் எடை குறைந்த டேப்லெட் ஆகும். வெறும் 440 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. 7100 mAh பேட்டரியுடன் வருகிறது. snapdragon 650 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ் டி ஸ்லாட் பயன்படுத்தி மேலும் இதை விரிவாக்கி கொள்ளலாம். டிஸ்ப்ளே 10. 3 இன்ச்சில் வருகிறது. 2000 x1200 பிக்சல் 60 hz 2k ரெசல்யூஷன் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த oppo pad air இன் விலை ரூ 14999 ஆகும்.