விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷ்ணுவர்தன். அவரது தந்தை தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் கே சேகர் ஆவார். இவரது தம்பி கிருஷ்ண குலசேகரன் தமிழ் திரை உலகில் நடிகராக இருக்கிறார். விஷ்ணுவர்தன் பல நல்ல கதையை கொண்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவைதான் விஷ்ணுவர்தன் இயக்கிய படங்களா என பலருக்கும் தெரியாது. அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு பட்டியல் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் பரத் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2007 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து விஷ்ணுவர்தன் பில்லா திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படத்தில் அஜித் டூயல் ரோலில் நடித்திருப்பார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய விஷ்ணு வரதன், பட்டியல், சர்வம் படத்தில் தொடர்ந்து ஆர்யாவை பயன்படுத்தினேன்.
என் கூடவே இருந்தவர்கள்.இந்த படத்தில் பரத் மற்றும் ஆர்யாவை ஒப்பந்தம் செய்த பிறகு ஒரு பெரிய நடிகர் நான் நடிக்கேன்னு சொன்னார். என்னிடம் படம் யாரை வச்சு பண்றீங்கன்னு கேட்டார். நான் ஆர்யா மற்றும் பரத்தை வைத்து பன்றேன்னு சொன்னேன். அதுக்கு பரத் வேணுனா வச்சிக்கோங்க ஆர்யா ரோலில் நான் பண்ணுறேன்னு சொன்னார். எனக்கு என்ன பண்ணனும்னே தெரியல. அடுத்த நாள் கூப்பிட்டு ஒரு பெரிய தொகை பணத்தை என் டேபிளில் வைத்தார். என் வாழ்க்கையில் முதன்முதலாக அதை பார்த்தேன். இந்த படத்துல நடிக்க ஆர்யா, பரத் எல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க.
ஆனா இவரு பணத்தை காட்டினார். எனக்கு புரியவே இல்லை. என் அப்பாவை கூப்பிட்டுஉங்க பையனுக்கு புரிய வைய்யுங்கன்னு அந்த ஹீரோ சொன்னாரு. ஆனா எங்க அப்பா சூப்பரா ஒரு விஷயம் சொன்னாரு. சார் இணைக்கு வரைக்கும் என் பையன் அவனா தான் முடிவு எடுக்குறான். அவன் எடுக்குற முடிவுக்கு நான் துணையை இருப்பேன். இந்த விஷயத்துலயும் அப்படித்தான்ன்னு சொல்லிட்டாரு. அவன் முடிவு தான் எனக்குன்னு சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தேன்.அதுக்கப்புறம் எங்கப்பா கிட்ட ஆர்யா பரத் ஏலம் சந்தோசமா இருக்காங்க அவங்க முதுகுல என்னால குத்த முடியாதுன்னு சொன்னேன் என்று பேசியுள்ளார்.