CINEMA
அஜித், விஜய்யை வைத்து ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான மோகன் நடராஜன்(71) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். நம்ம அண்ணாச்சி, சக்கரை தேவன், கோட்டைவாசல், அரண்மனைக் காவலன் மற்றும் மகாநதி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு மோகன் மற்றும் நதியா நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள் என்ற திரைப்படம் மூலம் மோகன் நடராஜன் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக உள்ளது. இவருடைய தயாரிப்பில் பிரபுவின் என் தங்கச்சி படிச்சவ, வேலை கிடைச்சிடுச்சு, விஜயின் கண்ணுக்குள் நிலவு மற்றும் அஜித்தின் ஆழ்வார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இறுதியாக விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக மோகன் நடராஜன் இருந்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக திரைப்படத்துறையில் இருந்து இவர் விலகி இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.