Connect with us

குண்டாகி அமுல் பேபி போல மாறிய நடிகை நிவேதா தாமஸ்.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள்..!

CINEMA

குண்டாகி அமுல் பேபி போல மாறிய நடிகை நிவேதா தாமஸ்.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள்..!

நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

   

 

இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து சிவமயம், அரசி மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களிலும் இவ்வாறு நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிவேதா தாமஸ் தற்போது உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் வராமல் உள்ளது. இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இடையில் திடீரென காணாமல் போனார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் மிகவும் குண்டாக இருந்தார். தற்போது தனது லேட்டஸ்ட் புகைபடங்களை பகிர்ந்து ரசிகர்கள் மெய் சிலிர்க்க வைத்துள்ளார் .

author avatar
Nanthini

More in CINEMA

To Top