CINEMA
அதை நிரூபிக்க எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்.. பொங்கி எழுந்த பிரேமம் பட நாயகன் நிவின் பாலி..!!
மலையாள திரை உலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியிட்டதிலிருந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. அறிக்கை வெளியானதில் இருந்து மலையாள நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் பிரபல நடிகரான நிவின் பாலி மீது புகார் அளித்துள்ளார். நிவின் பாலி உள்பட ஆறு பேர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளார். அந்த 6 பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணும் ஒருவர். ஸ்ரேயா பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த நவம்பர் மாதம் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துபாய்க்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் அங்கிருக்கும் தனியார் சொகுசு ஹோட்டலில் வைத்து நிவின் பாலி உள்பட ஆறு பேர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி அந்தப் பெண் அளித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு கூறியுள்ளார்.
அந்தப் பெண் கூறுவது முற்றிலும் பொய். எந்த எல்லைக்கும் சென்று என் மீது தவறு இல்லை என்பதை நிரூபிப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்புபவர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை சட்டரீதியாக கையாளுவேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram