CINEMA
“இது எல்லாமே திட்டமிட்ட சதி”.. சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ரீமா கல்லீங்கல்.. வைரலாகும் பதிவு..!
மலையாளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலர் மீது பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மலையாள திரை உலகம் மீது போதை குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த போதை குற்றச்சாட்டு தொடர்பாக தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா, மலையாள நடிகை ரீமா கல்லீங்கல் கொச்சியில் இருக்கும் அவருடைய வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடத்துவார். அதில் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்வார்கள்.
அந்தப் பாட்டில் போதைப்பொருள் மற்றும் போதை சாக்லேட்டுகள் பயன்படுத்தப்படும். அங்கு இளம் பெண்கள் பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது போன்ற பார்ட்டிகளில் கலந்து கொண்ட மலையாள பாடகர்கள் வேதனைக்குரிய பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர் என்று சுஜித்ரா குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் சுஜித்ராவின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மருத்துவர் நடிகை ரீமா கல்லிங்கல்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகளாக உங்களில் பலர் W.C.C க்கும் அது திரைத்துறையில் செய்யும் செயல்பாடுகளுக்கும் ஆதரவாக நிற்கிறீர்கள். இந்த ஆதரவும் நம்பிக்கையும் இருப்பதால்தான் என் மீதான சுசித்ராவின் குற்றச்சாட்டு குறித்து இப்போது உங்களுக்கு விளக்கம் அளிக்க நான் முடிவு செய்தேன். பாடகி சுசித்ராவின் 30 நிமிட நேர்காணலில் அவர் 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பி அவர்களின் பெயரை குறிப்பிட்ட அவரை அவமானப்படுத்தினார்.
மேலும் பகத் பாசில் போன்ற நடிகர்களின் வாழ்க்கையை நாசப்படுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்முட்டி மற்றும் ஹேமா கமிட்டி மூலம் சதி செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை வேறு யாராவது முன் வைத்தால் அது விசாரிக்கப்பட வேண்டும். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர் குற்றம் சாட்டுகிறார். அதுபோன்ற எந்த நிகழ்ச்சியையும் நான் நடத்தவில்லை. சித்ரா மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன். அவர் மீது சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளேன். அத்துடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அடுத்த கட்ட ஆலோசனையில் இருப்பதாக அவர் ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க