நீங்க இப்படி பண்ணா, தியேட்டருக்கு வரவங்க புளிசாதம், கூட எடுத்துட்டு வருவாங்க.. ஆதங்கத்தை வெளிபடுத்திய வில்லன் நடிகர்..!!

By admin on புரட்டாதி 4, 2024

Spread the love

நடிகர் கராத்தே ராஜா வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். விருமாண்டி, கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்போது எல்லாம் பெரிய படங்கள் தான் நல்ல போகிறது.

சிறிய படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறுவதில்லை. தியேட்டர்ல டிக்கெட் விலை அதிகமாக இருக்கு. உணவுப் பொருளை உள்ள எடுத்துட்டு போக விடமாட்டாங்க அப்படிங்கறது பெரிய மைனஸ். ஆதங்கமா இருக்கு. சம்பந்தப்பட்டவர்கள் அதுல கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் உணவு பொருளை எடுத்துட்டு போக அனுமதிக்கலன்னா குடும்பத்தோட எப்படி தியேட்டருக்கு வருவாங்க? தியேட்டருக்கு வர மக்களை நாம தடுத்தா படத்தை எப்படி ஓட்ட முடியும்?

   

Karate Raja , Karate Raja Photo Gallery, Karate Raja Videos, Actor Karate Raja, Karate Raja Profile

   

தியேட்டர்ல உணவு பொருள் நார்மல் விலையில விக்கணும். ஒரு ஆடியன்சா நான் தியேட்டருக்குள்ள போறேன் அப்படின்னா நீங்க உணவு பொருள் எடுத்துட்டு வராதீங்க அப்படின்னு சொன்னா நான் அதை ஏத்துக்கிறேன். ஆனா நீங்க விக்கிற உணவு பொருளை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கணும். சரியான நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு பொருளை தியேட்டர்ல விற்பனை செஞ்சா குடும்பத்தோட வர்றவங்க வீட்டில் இருந்து எடுத்துட்டு வரணும் என்கிற தேவை இல்ல.

 

Karate Raja : Biography, Age, Movies, Family, Photos, Latest News - Filmy Focus

அப்படி இல்லாம 400 ரூபாய் 250 ரூபாய்க்கு நான் பாப்கார்ன் விற்பனை செய்வோம் அப்படின்னா வீட்டிலிருந்து உணவுப் பொருள் எடுத்துட்டு அனுமதிக்கணும். வர்றதுக்கு குடும்பத்தோட வர்றவங்க பிள்ளைகளுக்காக பிஸ்கட் கொண்டு வருவாங்க. புளி சாதம் கூட வச்சு கொண்டு வருவாங்க. ஒரு படத்த கஷ்டப்பட்டு எல்லாரும் உழைத்து ரிலீஸ் பண்றோம். ஆனா மக்களை தியேட்டருக்கே வரவிடாத மாதிரி நிறைய கண்டிஷன்ஸ் போட்டால் படம் எப்படி ஓடும்? என ஓப்பனாக பேசியுள்ளார்.

Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி | Karate Raja