ராயன் படத்தை கெடுக்க வரிசை கட்டும் 7 தமிழ் படங்கள்.. ஆகஸ்ட் 2-ம் தேதி.. முழு லிஸ்ட் இதோ..!

By Mahalakshmi on ஜூலை 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி மொத்தம் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நடிகர்களின் படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் அரண்மனை 4, கருடன், மகாராஜா என்ற திரைப்படங்களின் வரிசையில் தற்போது ராயன் திரைப்படமும் இணைந்து இருக்கின்றது.

   

   

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகின்றது. இந்நிலையில் அப்படத்தின் வசூலை குறைப்பதற்காக வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி அடுத்தடுத்து ஆறு படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மலை பிடிக்காத மனிதன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்திருக்கின்றார். மேலும் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக போட் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடித்திருக்கின்றார். மேலும் சிம்பு தேவன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.

#image_title

அடுத்ததாக புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த திரைப்படத்தில் யூடியூபிர் இர்பான், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிறதாக 2-ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. வாஸ்கோடகாமா நடிகர் ஹீரோவாக நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் வாஸ்கோடகாமா.

இந்த திரைப்படத்தை ஆர்ஜி கே இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி தான் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து பாலசரவணன் ஹீரோவாக நடித்துள்ள பேச்சி திரைப்படம், மன்சூர் அலிகான் மகன் ஹீரோவாக நடித்துள்ள கடம்பாறை ஆகிய திரைப்படங்களும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. புதிய திரைப்படங்களின் வரவுகளால் கட்டாயம் ராயன் படத்தின் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.