வடிவேலு பட காமெடியில் நடித்த இந்த டீச்சரை ஞாபகம் இருக்கா..? அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

By Priya Ram on ஜூலை 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வடிவேலு என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவரது பாடி லேங்குவேஜ், நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு படத்திலும் வடிவேலு பேசும் டயலாக் பிரபலமாகும்.

   

முன்னணி நடிகர்களுடன் இணைந்து வடிவேலு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே, சிங்காரவேலன், அரண்மனைக்கிளி, கிழக்கு சீமையிலே, காதலன், ராஜாவின் பார்வையிலே, சந்திரலேகா, சந்திரமுகி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் பார்வையிலே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது.

   

 

வடிவேலு உடன் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை மகிமா நடித்துள்ளார். நடிகை மகிமா ஒரு இன்டர்வியூவில் பேசும்போது வடிவேலு சாரோட நடிக்க ஏற்கனவே எனக்கு இரண்டு மூன்று படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி 4 பசங்களோட சேர்ந்து வடிவேல் சார் விளையாட்டு இருந்தாரு. அப்ப கூட நான் கவனிக்கல.

ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு அவர் வந்தப்போ தான் வடிவேலு யாருன்னு எனக்கு தெரிஞ்சது. அந்த டீச்சர் கேரக்டர் இவ்வளவு பாப்புலர் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை மகிமாவின் சமீபத்திய புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுடன் டீச்சராக நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.