ஒரே படத்தால் ஓஹோன்னு உயர்ந்த அபிராமி.. ஆசை தட்டியதால் ரீ என்ட்ரி கொடுக்கும் 90’ஸ் நடிகை..

By Mahalakshmi on ஆடி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் எல்லாம் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்கள். ஒரு சில நடிகைகள் அம்மா கதாபாத்திரம், அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக பல நடிகைகளை கூறலாம்.

நடிகை நயன்தாரா, திரிஷா ஆகியோரெல்லாம் பல வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்தாலும் 90’ஸ் களில் புகழ்பெற்ற ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து வருகின்றார். அதேபோல்தான் சினேகாவும், அந்த வகையில் தற்போது மற்றொரு நடிகையும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கின்றார்.

   

   

அவர் யார் என்றால் நடிகை ரம்பா தான். 90’s காலகட்டத்தில் தொடையழகி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வந்த இவர் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் சென்னை திரும்பி இருக்கும் அவர் சமீபத்தில் விஜயுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து இருந்தார். இதையடுத்து அவரிடம் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு அவர் நடித்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.

 

அதற்காக ஹீரோயினியாக தான் நடிப்பேன் என்று கூறவில்லை ஆனால் நான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அழுத்தம் இருக்க வேண்டும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இதற்கு இடையில் மற்றொரு நடிகையான அபிராமி தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விருமாண்டி திரைப்படத்தின் மூலம் பலரின் நெஞ்சங்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருந்தார்.

இவரும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதிலும் இவர் கடைசியாக நடித்த மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

அதன்படி வேட்டையன், தக்லைப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்திருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். அதிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு துணிந்து இறங்கி நடித்து வருகின்றாராம். சரண்யா பொன்வண்ணன், ராதிகா உள்ளிட்ட நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் எல்லாம் சற்று ஒதுங்கி இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்தில் துணிந்து அபிராமி நடித்து வருவதாக கூறப்படுகின்றது.