மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்களா இதெல்லாம்..? அப்போவே மாஸ் பண்ணிருக்காரே..!!

By Priya Ram on ஜூன் 15, 2024

Spread the love

பிரபல நடிகரான மணிவண்ணன் தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் இயக்குனராக பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜாவிடம் மணிவண்ணன் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். மணிவண்ணன் இயக்கிய சிறந்த படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் சுகாசினி நடித்த காதல் திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

மணிவண்ணன் நக்சலைட் ஆதரவாளரா.! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பிரபலம் - Cinemapettai

   

இந்த படம் 1982-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அடுத்ததாக 1984-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் அம்பிகை நேரில் வந்தால் என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மோகன், அம்பிகா, ராதா ஆகியோர் நடித்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மூன்றாவதாக கடந்த 1984-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் 24 மணி நேரம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மோகன், சத்யராஜ், நளினி ஆகியோர் நடித்தனர்.

   

நகைச்சுவையில் சீர்திருத்தத்தைப் புகுத்திய சின்னத்தம்பி பெரியதம்பி!-it has been 36 years since the release of chinna thambi periya thambi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

 

நான்காவது விஜயகாந்த் மோகன், நளினி ஆகியோரை வைத்து நூறாவது நாள் என்ற காதல் மற்றும் திரில்லர் திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஐந்தாவது சத்யராஜ், பிரபு, லட்சுமி ஆகியோர் நடிப்பில் பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தை மணிவண்ணன் இயக்கினார். இந்த படம் 1986-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆறாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், பாண்டியன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம் முதல் வசந்தம்.

𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 on X: "முதல் வசந்தம். Versatile director -னா அதுல முழுசா பொருந்திப் போறது மணிவண்ணன் தான். அத்தனை subject தொட்டவரு அவர் ...

இந்த படம் 1986-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஏழாவதாக மணிவண்ணன் இயக்கத்தில் சின்னத்தம்பி பெரியதம்பி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சத்யராஜ், பிரபு, நதியா ஆகியோர் நடித்தனர் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக மோகன், ரூபிணி, செந்தில் ஆகியோரை வைத்து மணிவண்ணன் தீராத கரையினிலே என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 1987-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதனையடுத்து சத்யராஜ், பானுப்ரியா ஆகியோரை வைத்து மணிவண்ணன் புது மனிதன் என்ற படத்தை இயக்கினார்.

அமைதிப்படை: `சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ' - அன்றே அலப்பறை கிளப்பிய சத்யராஜ் - மணிவண்ணன் காம்போ! | Amaidhi Padai: A pathbreaking political satire film from Sathyaraj and ...

இந்த படம் 1991-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பத்தாதாக மணிவண்ணன் இயக்கிய தெற்கு தெரு மச்சான் என்ற திரைப்படம் 1992-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் நடித்தனர். அடுத்ததாக மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் நடித்த படம் தான் அமைதிப்படை. இந்த படம் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கடைசியாக சத்யராஜ் சீமான் இயக்கத்தில் மணிவண்ணன் இயக்கிய நாகராஜ் சோழன் திரைப்படம். இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

நூறாவது நாள்: மொட்டைத் தலையுடன் மிரட்டிய சத்யராஜ்; சஸ்பென்ஸ் படங்களின் முன்னோடி ஜெயித்தது எப்படி? | Nooravathu Naal: Revisiting Manivannan's pathbreaking suspense ...