பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான தன்யா ரவிச்சந்திரன் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது என்பது புதிது கிடையாது. அந்த வகையில் பலம்பெறும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன்கள் ஹம்சவர்தன் மற்றும் ஜார்ஜ் விஷ்ணு சினிமாவில் நடித்து வந்தனர்.
அதைதொடர்ந்து அவரின் பேத்தியான தன்யா 2016 ஆம் ஆண்டு வெளியான பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் உதயநிதிக்கு ஜோடியாக நெஞ்சுக்கு நீதி, சிபிராஜுடன் மயோன் உள்ளிட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் மிக ஹோமிலியாக நடித்து வந்த தன்யா அதன்பிறகு தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரசவாதி.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.