கார்த்தியோட ஜோலிய முடிச்சுவிட்டது பத்தாதுன்னு.. 2 முக்கிய நடிகர்களுக்கு வலைவீசும் கொம்பன் பட இயக்குனர்..!

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

இயக்குனர் முத்தையா கௌதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபுவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் கிராமத்து திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் முத்தையா. சசிகுமார் இயக்கத்தில் வெளியான குட்டிப்புலி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

   

   

இவர் கடைசியாக நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதைத்தொடர்ந்து தனது மகனான விஜய் முத்தையாவை வைத்து சுள்ளான் சேது என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். அடுத்ததாக இரண்டு முக்கிய நடிகர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபு என இரண்டு நடிகர்களை வைத்து அவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த திரைப்படமும் வழக்கம் போல் அவரின் கிராமத்துக் கலைக்களத்தில் தான் உருவாகும் என கூறப்படுகின்றது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இயக்குனர் முத்தையா கௌதம் கார்த்திக்கை வைத்து தேவராட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விக்ரம் பிரபுவை வைத்து புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படத்தின் இயக்கி இருக்கின்றார். இந்நிலையில் தற்போது இருவரையும் வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

இவர் கடைசியாக கார்த்திக் அவர்களை வைத்து இயக்கியிருந்த விருமன் திரைப்படமும், ஆர்யாவை வைத்து இயக்கியிருந்த காதர் பாட்ஷா என்ற திரைப்படமும் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கார்த்திக் விரும்ன் திரைப்படத்தில் கார்த்திக் கேரியரை காலி பண்ணிட்டீங்க இப்ப கௌதம் கார்த்திக் மற்றும் விக்ரம் பிரபுவின் கேரியரையும் காலி பண்ண போறீங்களா என்று கேட்டு வருகிறார்கள்.