தோல்வி மேல் தோல்வியா..? இவர் கதையைக் கொஞ்சம் கேளுங்க.. தன்னம்பிக்கை ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்..

By John

Updated on:

வாழ்க்கைப் பாதையில் தோல்வி மேல் தோல்வி கண்டு விரக்தியின் உச்சத்தில் தன்னம்பிக்கையை இழந்து படாத பாடு படுகிறீர்களா? உங்களுக்கெல்லாம் இவருடைய வாழ்க்கை ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழலாம். அவர் வேறுயாருமல்ல, நிக் வாய்ச்சஸ்  என்ற ஆஸ்திரேலிய மனிதர் தான். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.. அதனினும் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது என்ற ஔவையாரின் பாடலுக்கு அப்படியே மாற்றாகப் பிறந்தார் நிக் வாய்ச்சஸ். ஆம் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல், கால்களும் இல்லை. பெட்ரா -அமலியோ சின்ட்ரோம் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டார்.

TA 20190819092541535 357727

ஆரம்பத்தில் இவருடைய ஊனத்தைக் காட்டி அவருக்கு பள்ளிகளில் கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் சட்டத்தில் கொண்டு வந்த மாறுதல்கள் காரணமாக கல்வி பயில ஆரம்பித்தார். எனினும் அவர் பயின்றது மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில். தான் இவ்வாறு பிறந்து விட்டோமே என பலரது கேளிக்கும் ஆளானார். கடும் மன உளைச்சலால் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

   
Ch79O4WXAAAvYQC

ஆனாலும் அவரது பெற்றோர் செய்தித் தாள் ஒன்றைக் காட்டி ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையை எடுத்துக் காட்டாக காண்பிக்க  நம்பிக்கையினாலும், உற்சாகத்தினாலும் மெல்ல மெல்ல வாழ்க்கையை ரசித்து வாழ ஆரம்பித்தார். தானே அவரது வேலைகளைச் செய்வது, கம்ப்யூட்டர் இயக்குவது போன்ற வேலைகளைக் கற்றுக் கொண்டார். மேலும் அவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

விஜயகாந்திர்க்கு நடந்ததை போல் யாருக்கு நடக்காது!மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசிய நடிகை பிரியங்கா மோகன்…

அவர் பயின்ற பள்ளி வகுப்பின் ஆசிரியர் அவரை மாணவர் தலைவனாக நியமிக்க அன்று முதல் இவருக்கு நம்பிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து கல்வியில் வெறி கொண்டு படித்து நிதி சார்ந்த பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்வியை முடித்தபின் தொடர்ந்து சமூக சேவைகள் செய்யும் நோக்கில் பல தொண்டு நிறுவனங்களை அணுகி நன்கொடைகள் பெறத் துவங்கினார். பின்னாளில் Life Without Limbs என்ற லாப நோக்கமற்ற சமூக தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி தற்போது வரை நடத்தி வருகிறார்.

Nikki
nikki 2

தன்னம்பிக்கை பற்றி இவர் எழுதிய புத்தகங்களும், காணொளிகளும் இணையத்தையும், நூலகத்தையும் இன்றும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருந்த ஒருவர் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் தன்னம்பிக்கை  நாயகனாகத் திகழ்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்விலும் தான் ஹீரோ என்பதை நிருபித்திருக்கிறார் நிக் வாய்ச்சஸ்.

a

தன்னுடைய குறையை மறைத்து இருந்த சுவடே தெரியாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் நிக் வாய்ச்சஸ் தற்போது தன்னம்பிக்கை பேச்சாளராக அமெரிக்க மக்களிடையே உரையாற்றி வருகிறார்.