ஆண் பிள்ளை இல்லாத ஏக்கம்… 4-வதும் பிறந்த பெண் குழந்தை… விரக்தியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love

கர்நாடக மாநிலச் சேர்ந்தவர் அஸ்வினி ஹலகட்டி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த இவர் நான்காவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ளார். இதனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அவருக்கு கடந்த 23ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது .இதனால்  அதிர்ச்சியடைந்த அவர் மறுநாள் குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று காலை அஸ்வினியின் தாய் பச்சிளம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.

நான்காவது பெண் குழந்தை பிறந்து விட்டது என்று வேதனையிலிருந்து அஸ்வினி தான் பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தார் . அஸ்வினியின் தாய் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பியதும் குழந்தை மூச்சு விடவில்லை என்று கூறி அழுது நாடகம் ஆடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்றும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் அஸ்வினியை போலீசார் கைது செய்தனர்.