செங்கோட்டையன் ராஜினாமாவில் அரசியல் சூழ்ச்சி..? விஜய் கொஞ்சம் கவனமா இருங்க… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love
பாஜகவிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது MLA பதவியில் இருக்கும்போது வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலேயே  ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன் முடிவு தன்னிச்சையானதா? அல்லது அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவருடைய  கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருப்பதாகவும், மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும் எனவும் கூறியுள்ளார்.