சேலத்தில் கணவர் கடனால் தற்கொலை செய்து கொண்டதால் வேலையில்லாத மனைவி எடுத்த முடிவு பாராட்டுகளை பெற்றுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் பிரேமா. இவர் கணவர் 7 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். 31 வயதான பிரேமாவிற்கு ஐந்து, மூன்று மற்றும் இரண்டு வயதுடைய 3 குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய கணவர் இறந்ததையடுத்து அந்த குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்த அவர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதற்கு உறவினர்களிடம் உதவி கேட்ட போது அவர்கள் யாரும் செய்யவில்லை. என்னிடம் 50 ரூபாய் தான் இருந்தது. அதைவைத்துக்கொண்டு நான் விஷத்தை வாங்கி குடிக்கலாம் என்று சென்றேன். ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்து விட்டார். அன்று தெருவில் இருந்து ஒரு முடி வாங்கும் நபர் வந்தார். அவர் குரலை கேட்டதும் நான் வீட்டிலிருந்து வெளியே சென்று என் முடியை வெட்டி விட்டேன்.மொட்டையடித்து முடியை ரூ.150 க்கு விற்று, பிள்ளைகளின் பசியை போக்கினேன். இப்போது வேலை செய்து என் குழந்தைகளை வளர்ப்பேன்” என்று கூறியுள்ளார். தற்கொலை செய்ய நினைத்தவரின் தாயுள்ளத்திற்காக விதியும் அதிசயத்தை நடத்தியுள்ளது. தற்போது யாரோ ஒருவர் மூலம் பிரேமாவிற்கு வேலை கிடைக்க, தற்போது பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…