தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமானவர்தான் நிர்மலா பெரியசாமி. செய்தி வாசிக்கும் போது இவர் சொல்லும் வணக்கம் என்ற வார்த்தையை கேட்பதற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பொதிகை, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றியுள்ளார். ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர். அதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிரபலமான நபராக வலம் வந்தாலும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் 900-ற்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு தான் வந்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நிர்மலா பெரியசாமி பேசியுள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியை முதலில் வேறு பெயர்களில் நடத்தி இருந்தார்கள். பிறகு புதிதாக தொடங்க வேண்டும் என்று நினைத்தபோது என்னுடைய சகோதரி ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். அப்படித்தான் நானும் இந்த நிகழ்ச்சியில் கமிட்டானேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டிஆர்பியில் 8 புள்ளிகளை கடந்தது. 8 புள்ளிகள் என்பது அப்போது ஜீ தமிழுக்கு மிகப்பெரிய விஷயம்தான். இந்த டிஆர்பி 65 புள்ளிகளை எட்டும் வரை நான் அந்த நிகழ்ச்சியில் இருந்தேன்.
300 கோடிக்கு மேல் செலவு செய்து வீணா போய் சேனலையே மூடிவிட்டு சென்றுவிட்டார்களாம். ஆனால் இந்த நிகழ்ச்சியை வைத்து தான் ஜீ தமிழ் மீண்டும் வந்தது. அதற்கு முக்கிய காரணமே நிர்மலா பெரியசாமியின் பர்பாமன்ஸ் தான் என்பதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். ஆனால் அங்கு நடந்த தவறுகளுக்கு உடன்படாதது தான் என்னுடைய தவறு. நான் நிகழ்ச்சியில் இருந்த போது ஒரு பெண் ஏழு கொலை செய்த உண்மை வெளியில் வந்தது. அந்தச் செய்தி நியூயார்க்கு டைம்ஸ் வரை சென்றது. என்னை வந்து இன்டர்வியூ எடுத்தாங்க.
அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண் கொலை செய்தேன் என்று சொன்னதை சேனல் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு ஷோ என்ற நிலையில்தான் இருந்து விட்டனர். ஆனால் இப்போது சமீபத்தில் பார்த்தேன். அந்தப் பெண் கொலை சம்பவத்தை அவர்கள் தான் வெளியில் கொண்டு வந்ததாக இடை சருகள் சொல்கிறார்கள். இதைக் கேட்டு எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. அடேங்கப்பா இப்படி எல்லாம் கூடவா மேனி பிளேட் பண்ணுவாங்க என்று யோசித்தேன். இருந்தாலும் பரவாயில்லை. அவர்களின் பங்கும் உள்ளது. அந்த நிகழ்ச்சியை தனியாலாக என்னால் நடத்த முடியாது என்ற நிர்மலா பெரியசாமி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…