எப்படித்தான் மனசு வருதோ..! 14 வயது மகனைத் தவிக்க விட்டு… 22 வயது ஆட்டோ ஓட்டுநருடன் ஓட்டம்… உயிருக்கு பயந்து 37 வயது பெண் செய்த் காரியம்..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த 37 வயதான கவிதா என்ற பெண், தனது 14 வயது மகனைப் பிரிந்து, 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவருடன் மைசூருவில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கவிதாவைக் காணவில்லை என அவரது தந்தை அளித்த கடத்தல் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தானாக முன்வந்து ஆட்டோ ஓட்டுநருடன் சென்றதாகவும், அவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கவிதா வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், இந்த காதல் ஜோடிக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தனது மறைந்த முதல் கணவரின் உறவினர்கள் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயதில் இளையவருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய இந்தச் சம்பவம், பெங்களூரு மற்றும் மைசூரு பகுதிகளில் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.