டிக்டாக் சமூக வலைதளத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கருவிலிருக்கும் குழந்தைக்கு ‘கே மியூசிக்’ (Gay Music) ஒலிபரப்பிய வீடியோ தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தனது வயிற்றின் மீது ஹெட்ஃபோன்களை வைத்து, இசைக்கலைஞர் ‘ட்ரோய் சிவான்’ என்பவரின் பாடலை ஒலிக்கச் செய்கிறார். இதன் மூலம் தனது குழந்தையை ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக (Gay) மாற்ற விரும்புவதாக அவர் வெளிப்படுத்திய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு தரப்பினர், பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத் தேர்வையோ அல்லது விருப்பத்தையோ தாய் தீர்மானிக்க முயல்வது தவறு என்றும், இது ஒரு வகையான திணிப்பு என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இசைக்கும் பாலின அடையாளத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது அறிவியல் ரீதியானது அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
A mother posted on TikTok that she’s playing “gay” music next to her baby bump hoping that it will make her son gay.
The entire comment section is FLOODED with to-be mothers and mothers sharing techniques they used or are using to make their own kids gay.
This is DISGUSTING. pic.twitter.com/HqpybMv469
— Cam Higby 🇺🇸 (@camhigby) April 24, 2026
மறுபுறம், ஒரு தாய் தனது குழந்தைக்கு எந்த மாதிரியான சூழலை வழங்க வேண்டும் என்பது அவரது உரிமை என்று சிலர் ஆதரவாகப் பேசினாலும், பெரும்பாலானோர் இது விளம்பரத்திற்காகச் செய்யப்படும் தேவையற்ற செயல் என்றே கருதுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தனிமனித விருப்பம் மற்றும் குழந்தையின் சுதந்திரம் குறித்த சூடான விவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.
