கண்ணீர்..! ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நேர்ந்த விபரீதம்: நடைமேடையில் நசுங்கி தாய் உயிரிழப்பு… அனாதையாக நின்ற 2 மாத பச்சிளம் குழந்தைகள்…!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 24 வயதான முஸ்கான் மசி என்ற பெண், தனது இரண்டு மாத இரட்டை குழந்தைகள் மற்றும் மருமகளுடன் அசன்சோலில் இருந்து டெல்லிக்கு ‘சியால்டா-ஜலியான்வாலா பாக்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் கோடெர்மா நிலையத்தில் நின்றபோது, தண்ணீர் அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்குவதற்காக அவர் கீழே இறங்கியதாகத் தெரிகிறது.

அவர் கீழே இருந்தபோதே ரயில் புறப்படத் தொடங்கியுள்ளது. ரயிலைத் தவறவிடக் கூடாது என்ற பதற்றத்தில், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முஸ்கான் மசி முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் நழுவி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கிக் கொண்டார். இதில் ரயிலின் சக்கரத்தில் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோரமான காட்சியைக் கண்டு அங்கிருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

   

   

தாயின் மறைவைத் தொடர்ந்து, ரயிலுக்குள் இருந்த அந்த இரண்டு மாத பச்சிளம் இரட்டை குழந்தைகள் அனாதையாக விடப்பட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) அந்த குழந்தைகளை மீட்டு பாதுகாப்பாக ஒப்படைத்தனர். ஒரு நொடி கவனக்குறைவால் நேர்ந்த இந்த விபத்து, பச்சிளம் குழந்தைகளின் தாயைப் பறித்துக்கொண்டதுடன், அந்த ரயில் நிலையம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது