நீயெல்லாம் ஒரு தாயா..? “அம்மா மூச்சு விட முடியல” மகனை பிளாஸ்டிக் பையில் அடைத்து… ரீல்ஸ் எடுக்க பெண் செய்த கொடூரம்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் ஸ்டண்ட் செய்யும் போக்கு இப்போதெல்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ரீல்கள் மற்றும் வீடியோக்களுக்கு, பல்வேறு ஆபத்தான சாகசங்கள் காணப்படுகின்றன. சிலர், தனித்து நிற்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான சாகசங்களை செய்கிறார்கள். அந்த வகையில் வைரலாகும் வீடியோவில்,  ஒரு ரஷ்ய தாய் தனது சொந்த குழந்தையுடன் ஒரு ஆபத்தான பரிசோதனையை செய்யவைத்து அந்த ரீல்ஸ் விடியோவை வெளியிட்டதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்

சரடோவைச் சேர்ந்த 36 வயதான அன்னா சபரினா ஒரு பிரபலமான பெற்றோர் வலைப்பதிவை நடத்துகிறார்,. அவரது சில வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை எட்டியுள்ளன. சமீபத்தில் அவர் தனது மகனை ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் வைத்து அதிலிருந்து காற்றை வெளியேற்றும் வீடியோவை வெளியிட்டார். சிறுவன் சில வினாடிகள் உள்ளே இருந்து “அம்மா அம்மா” என்று கத்தினான். இதனால் குழந்தை உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் குழந்தை பாதுகாப்பு சேவைகள் இப்போது குடும்பத்தை விசாரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. மேலும் நெட்டிசன்கள் நீயெல்லாம் ஒரு தாயா? என விமர்சித்து வருகிறார்கள்.